மாவட்டம்

கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்த அதிகாரிகள்...

Malaimurasu Seithigal TV

சென்னை | மத்திய புழல் சிறையில் உயர்பாதுகாப்பு விசாரணை பிரிவில் சிறை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது போதை பொருள் கடத்தல் வழக்கில் கடந்த வருடம் மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த முகமது அப்னாஸ் ( வயது 28) என்ற கைதி, கழிவறையில் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம்கார்டு, பேட்டரி, சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர் மீது  சிறைக் காவலர்களை மிரட்டியதாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இந்த செல்போன் மூலம் அவர் யார் யாரிடத்தில் பேசி வந்தார் என்பது பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.