சென்னை | பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். ரூ.54 லட்சத்தி 98 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 70 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | கிரிப்டோ கரன்சி வைத்து ஏமாற்றியவரை கடத்திய நபரால் பரபரப்பு...