மாவட்டம்

பேசியே உலக சாதனை படைத்த கல்லூாி மாணவன்...

கோவை மாவட்டத்தில் தொடா்ந்து 24 மணி நேரம் பேசி கல்லூாி மாணவன் உலக சாதனை படைத்துள்ளாா்.

Malaimurasu Seithigal TV

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச்  சேர்ந்த 17 வயது மாணவன் டி. கார்த்தி, 24 மணி நேரம் இடைவிடாமல் பேசி உலக சாதனை படைத்துள்ளார். கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கி வரும்  தனியார் பள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி கிளப் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி ஜனவரி 20 அன்று காலை 10 மணி அளவில் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

'தமிழும் தமிழரும்' என்னும் தலைப்பில் தொடங்கி தொல்காப்பியம், அகத்தியம், பொன்னியின் செல்வன், ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுங்காப்பியம் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது மாணவனின் பேச்சு.

இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 24 மணி நேரம் தங்கு தடையின்றி தமிழில் பேசி தமிழ் மொழியின் பெருமையும் அதனை காக்கவும் வளர்க்கவும் அனைவரும் சிறு முயற்சி ஆவது செய்ய வேண்டும் என்று அங்கு கூடி இருந்த அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

சிறு வயதிலேயே இவ்ளளவு பெரிய சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜனவரி 21 அன்று தன்னுடைய 18 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கார்த்தி வெற்றிகரமாக 24 மணி நேரம் இடைவிடாத பேச்சை நிறைவேற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

தீர்ப்பாளர்கள் சாதனைக்கான பதக்கத்தையும் அதற்கான சான்றிதழையும் வழங்கினர். 

“தமிழின் மீது எப்பொழுதும் அளவில்லா பற்று கொண்டிருந்தேன். தமிழுக்காக ஏதேனும் பண்ண வேண்டும் என்ற ஆவலுடன் இச்சாதனையை எனது 18 ஆவது பிறந்த நாளன்று செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இச்சாதனையை செய்ய அணைத்து உதவிகளையும் செய்து ஆதரவு அளித்த பள்ளி நிர்வாகத்திற்கும் ரோட்டரி கிளப் உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு மாத காலமாக முறையான உணவு தூக்கம் இல்லாமல் பயிற்சி செய்ததால் தான் இன்று இச்சாதனை சாத்தியமாயுள்ளது. மிகவும் உறுதுணையாய் இருந்த எனது வீட்டாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்."

இவ்வாறு அவர் கூறினார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேரந்தவர் என்பதும் எவரது தந்தை விபத்தில் உடல் ஊனமாகன நிலையில் வருமையின் பிடியிலும் விடா முயற்சியுடன் சாதனை படைத்தவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.