தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தவர் முருகன் இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், (ஏப்ரல் 10) தேதி இரவு அவருடைய உடல் நிலை மோசமான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றுள்ளார்.
பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி என்ற இடத்தில ஆம்புலன்ஸ் வந்தபோது அங்கு சாலையோரம் நின்றுகொண்டிருந்த கனரக வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் மோதியதால், விபத்து ஏற்பட்டது.
இதில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட முருகன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார், மேலும் அவருடன் சென்ற அவரது மனவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மேலும் ஆம்புலன்ஸ் ஒட்டிய ட்ரைவர் கவியரசனுக்கு கால்கள் முறிந்த நிலயில் , உடன் இருந்த உதவியாளர் விஜய் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சைக்கு சென்றவர்கள் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்