மாவட்டம்

காலங்கள் கடந்தாலும் அழகு மாறாத காட்சி தரும் பாம்பன் பாலம்...

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 45 நாட்களுக்கு பிறகு இன்று ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டு இருபுறமும் கப்பல்கள் கடந்து சென்றன.

Malaimurasu Seithigal TV

ராமநாதபுரம் | ராமேஸ்வரம் தீவு பகுதியில்  அமைந்துள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் தூக்கு  பாலத்தில் சென்சாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில்கள் பாம்பன் பாலம் வழியாக இயக்காமல் மண்டபத்தில் இருந்து ரயில்கள் இயக்கி வந்தனர்.

மேலும் கடந்த 45 நாட்களாக ரயில் சேவை பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் இயக்கப்படாமல் பாலம் ரயில் தூக்குபாலம்  திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று பாம்பன் ரயில் தூக்கு பாலம் அதிகாரிகளால் இன்று திறக்கப்பட்டு வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்கும் தெற்கிலிருந்து வடக்கு பகுதிக்கும் கப்பல்கள் கடந்து சென்றனர். 45 நாட்களாக காத்திருந்த விசைப்படகு மீனவர்கள் இன்று தூக்குப்பாலம் திறக்கப்பட்ட பிறகு இரு புறங்களிலும் வேகமாக கடந்து சென்றனர். 

மேலும் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள சென்சார் கோளாரை உடனடியாக சரி செய்து ரயில் சேவையை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பாம்பன் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.