பரமக்குடியில் சாலை விபத்தில், பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே அரியகுடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், இவரின் மகன் முகேஷ் இவருக்கு வயது 18, தற்போது 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருந்திருக்கிறார். இவர் தனது வீட்டில் இருந்த குக்கரை பழுது நீக்குவதற்காக பரமகுடியில் உள்ள பழுது நீக்க கடைக்கு, தனது டூவீலரில் அரியக்குடியிலிருந்து பரமக்குடி நோக்கி வந்துள்ளார்.
மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, வாகைக்குளம் என்ற இடத்தில் முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த முகேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர் முத்துராஜாவை கைது செய்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்