மாவட்டம்

மாவட்ட ஆட்சியரின் பெயரில் மோசடியில் ஈடுபட முயற்சி!

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி மாநிலத்தின் கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனர் கருணாகரன். இவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி ஒரு எண்ணில் இருந்து செய்தி வந்தது.

பரிசுக் கூப்பன்

அந்த எண்ணில்  புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவனின் புகைப்படம் இருந்தது. அதையடுத்து கருணாகரன், தொடர்ந்து செய்தி அனுப்பி உரையாடலை மேற்கொண்டார். மறுமுனையில் சாட்டிங் செய்தவர், ஒரு ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வாங்கி கொடுக்க கூறினார்.

போலீஸில் புகார்

இதனால் கருணாகரனுக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக அவர் விசாரித்தபோது அது போலி எண் என்பதும், மாவட்ட ஆட்சியர் பெயரில் மோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.  இதனையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் கருணாகரன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மோசடி வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் எண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

புதுச்சேரியில் மாவட்ட வல்லவன் பெயரில் ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட முயற்சித்த சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் பெயரில் இதுபோன்ற மோசடி நடைபெற முயன்றதும் குறிப்பிடத்தக்கது.