மாவட்டம்

உதயநிதி ரசிகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு...

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற துணைத் தலைவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வௌகின்றனர்.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி | உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற துணைத் தலைவராக இருப்பவர் சதீஷ். இவர் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம், 3வது கிராசில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று சதீஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் ஆறு பேர் அவரின் வீட்டு அருகே வந்து பீர் பாட்டில்களில் பெட்ரோல் ஊற்றி அதை பற்ற வைத்து சதீஷ் வீட்டின் மீது எரிந்துள்ளனர். அவர்கள் எரியும் காட்சியை அவரது மனைவி ராதிகா வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை, தனது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, சதீஷின் மனைவிடம் கேட்கையில் முன்விரோதம் காரணமாக அவர்கள் தங்களின் வீட்டின் மேல் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர் என தெரிவித்தனர். மேலும் இதன் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்பது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.