private hospital  
மாவட்டம்

நம்பி வந்த மாணவிகளை.. இப்படி நாசம் பண்ணலாமா? "மருத்துவர்" கொடுத்த ட்விஸ்ட்.. சிக்கிய உரிமையாளர்!

உரிமையாளர் "ஜாவித்" என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் குற்றச்சாட்டு வைத்து உள்ளனர்.

Anbarasan

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், உள்ள புத்துகோயில் பகுதியில் நிஷா என்னும் பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது, இந்த மருத்துவமனையில் சுற்றுவட்டார கிராமங்களான புத்துக்கோவில், அம்பலூர், தெக்குப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் முதியோர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

வாணியம்பாடி துறையேரி பகுதியில், செயல்பட்டு வரும் தாஸ் நர்சிங் கல்லூரி மாணவிகள் தொடர்ந்து இரண்டு ஆண்டு காலமாக பயிற்சிக்கு சென்று வருகின்றனர், இந்த நிலையில் பயிற்சிக்காக வரும் நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் மருத்துவமனையின் உரிமையாளர் "ஜாவித்" என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் குற்றச்சாட்டு வைத்து உள்ளனர்.

இதேபோல் சென்ற ஆண்டு பயிற்சிக்கு வந்த மாணவிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் ஜாவித், தொடர்ந்து இதுபோல் செய்திகொண்டிருந்ததால், இந்த ஆண்டு மாணவிகள் அதே மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவரிடம் இதை பற்றி கூற, அவர் மாணவிகளுக்கு உறுதுணையாக இருந்து இந்த தகவலை வெளிகொண்டுவந்துள்ளார்.

தகவலறிந்த அம்பலூர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து, மருத்துவமனை உரிமையாளர் ஜாவித் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்