மாவட்டம்

கர்ப்பிணி பெண் உயிரிழப்பு.. நிர்வாண பூஜை செய்த கணவரால் பரபரப்பு..!

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! மனைவியின் உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி போல நிர்வாண பூஜை செய்த கணவரால் பரபரப்பு.

Malaimurasu Seithigal TV

மனைவி உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த சின்ன பசிலிகுட்டை பகுதியைச் சேர்ந்த ராஜாதேசிங்கு என்பவருக்கு நான்கு வருடங்கள் முன்பு பூர்ணிமா (25) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக பூர்ணிமா இருந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியில் மாட்டு கொட்டகையை சுத்தம் செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக கருவியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை

பூர்ணிமா உயிரிழந்ததை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து பூர்ணிமாவின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உறவினர்கள் முன்னிலையில் உடலை அடக்கம் செய்ய முற்பட்டனர்.

நிர்வாண பூஜை

உடலை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழியில் அவருடைய கணவர் ராஜதேசிங்கு குழி முழுவதும் உப்பை கொட்டி விட்டு அதில் திடீரென நிர்வாணமாக பூஜை செய்யத் தொடங்கினார். மேலும் தன்மீது உப்பை கொட்டிக் கொண்டும் குழியில் படுத்துக்கொண்டு பூஜை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சாமியார் போல் மாறியதாகவும் அவர் சிவபக்தர் எனவும் மனைவியின் உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி போல பூஜை செய்ததால் தாங்கள் பயந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்