மாவட்டம்

“கேப்டன் சிலையை ஆரத்தழுவி கண்ணீர் விட்ட பிரேமலதா” - இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அமைதி பேரணி… இருமுடி கட்டி வந்து ரசிகர்கள் அஞ்சலி!

தமிழக துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்...

Mahalakshmi Somasundaram

இன்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் குருபூஜையாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினரும், ரசிகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பிரேமலதா விஜயகாந்த் தனது இரண்டு மகன்களுடன் தொண்டர்கள் புடை சூழ அமைதி ஊர்வலமாக சென்று கேப்டனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பிரேமலதா கேப்டனின் சிலையை ஆரத்தழுவி கண்கலங்கி தனது சோகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தங்களின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கேப்டனின் ரசிகர்கள் சிலர் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்று சாமியை தரிசனம் செய்வது போல இருமுடி கட்டி வந்து கேப்டனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்தினர், தமிழிசை சௌந்தரராஜன் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் மற்றும் சில திரை பிரபலங்களும் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தமிழக துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமியும் கேப்டான் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கேப்டானின் ரேண்டம் ஆண்டு நினைவஞ்சலியை தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் கேப்டன் குறித்து பதிவிட்ட தமிழக முதலமைச்சர் அவரின் நற்பணிகளை நினைவு கூறுவதாக தெரிவித்துள்ளார். அதில் “ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்” என பதிவிட்டிருக்கிறார்.

மேலும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான அருண்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில்கருப்பு எம்.ஜி.ஆர் என்று மக்களால் கொண்டாடப்பட்டவர்… அரசியல் வியாபாரிகள் மத்தியில் 'அசல்' தங்கமாய் வாழ்ந்தவர்! தவறு கண்டால் பொங்கும் 'கோபம்'... பசி என்று வந்தால் கொடுக்கும் 'குணம்'... அது தான் அவரின் தனித்துவம்! தோழமைக்கு தோழமையாக… துணிச்சலுக்கு துணிச்சலாக... வாழ்ந்து மறைந்த மாமனிதர்!! கள்ளம் கபடமற்ற அந்த வெள்ளை உள்ளத்திற்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம்!” என பதிவிட்டு கேப்டனுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.