மாவட்டம்

ஆமை வேகத்தில் பணிகள்... தவிக்கும் நகர வாசிகள்...

சென்னை கே.கே. நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

வடகிழக்கு பருவமழையானது நடப்பு மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டை போல்  மழைநீர் தேங்கக்கூடாது என்பதற்காக சென்னை முழுவதும் மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. இதில் 97 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டதாக மாநகராட்சி நேற்று தெரிவித்தது.

ஆனால் மழைநீர் தேங்கக் கூடிய முக்கிய பகுதியான கேகே நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணயில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் வடிகால் பணிக்காக கடந்த வாரம் பேருந்து நிலையம் அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது வரை பணி தொடங்கப்படவில்லை என்றும், இதனால் அங்குள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, மாற்றுத்திறனாளி அலுவலகத்துக்கு செல்வோரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர போக்குவரத்து நெரிசலும் நிலவுவதால், பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.