மாவட்டம்

திடீரென பரவிய காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள் எரிந்து சேதம்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்தது.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி | தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதி மூங்கில் காடுகளை கொண்ட அடர்ந்த வனப்ப குதியாகும். இங்கு மூங்கில் உள்ளிட்ட அரியவகை மரங்கள், செடிகொடிகள் அதிக அளவில் காணப்படுகிறது. அதேப்போல இங்கு காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள், காட்டு எருமைகள், பாம்பு இனங்கள், பறவை இனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் வாழ்கின்றன.

கோடை காலங்களில் இந்த வனப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் காட்டுத்தீ பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது. அதேபோல அய்யூர் வனப்பகுதிக்கு உட்பட்ட தொழுவ பெட்டா கிழக்கு காட்டுப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த தீயில் வனப்பகுதியில் இருந்த மூங்கில் மரங்கள் உள்ளிட்ட அரிய வகை மரங்கள், செடி கொடிகள் தீயில் கருகி சாம்பலானது. கொழுந்து விட்டு எரிந்த காட்டுத்தீ அடுத்தடுத்து வனப்பகுதிகளில் பரவி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர். தீயணைப்புத்துறை தொழுவ பெட்டா கிராம மக்கள் ஆகியோர் உதவியுடன் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அய்யூர் வனப்பகுதி வழியாக மலை கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பீடி சிகரெட் உள்ளிட்ட எளிதில் தீபிடிக்கக் கூடிய பொருட்களை வனப்பகுதியில் வீசி எறிய கூடாது. மீறி வனப்பகுதியில் தீயை உண்டாக்கினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.