மாவட்டம்

உயிருக்கு போரடியவர்க்கு ஆம்புலன்ஸ் மறுப்பு... புதுச்சேரியில் பரபரப்பு...

விபத்து ஏற்ப்பட்டு காயங்களுடன் வந்த நபரை மேல் சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்பூலன்ஸ் ஓட்டுநர் இல்லை என கூறப்பட்டதாக விபத்தில் சிக்கியவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகின்றது.

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் | ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் கூலி தொழிலாளியான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது புதுச்சேரி எல்லையான திருக்கனூர் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரின் தலையில் அடிப்பட்டு இரத்தம் கசிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மண்ணாடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து  சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைகாக விழுப்புரம் முண்டியாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்கு ராஜேந்திரன் தன்னை ஆம்பூலன்ஸில் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர் ஆம்பூலன்ஸ் உள்ளது அதற்கு ஓட்டுநர் இல்லை என கூறியதாக தெரிகிறது, இது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை ஆம்புலன்சில் நிலையத்தில் நோயாளிகளை ஏற்றுவதற்க்கு ஸ்ட்ரக்செர் இல்லை என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது உள்துறை அமைச்சரின் தொகுதியில் உள்ள ஆராம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளை ஏற்றி செல்ல ஆம்பூலன்ஸ் இருந்தும் ஓட்டுநர் இல்லை என்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.