மாவட்டம்

1 ரூபாய் கட்டண பேருந்து... என்.ஆர் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்...

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் 1 ரூபாய் கட்டண பேருந்து இயக்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை கண்டித்து  சட்டபேரை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுச்சேரியில்  கல்வியாண்டு முடிய உள்ள சூழலில் செண்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறததை கண்டித்தும், அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு சரியான உணவு அளிப்பதில்லை என்றும், பள்ளி கல்லூரி மானவர்களுக்கு உடனடியாக 1 ரூபாய் கட்டண பேருந்தை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் சட்டபேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர், ஆர்ப்பாட்டத்தின் போது ஆளும் என்.ஆர் காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.