மாவட்டம்

சங்கரநாராயண சுவாமி கோயில் பிரதோஷ வழிபாடு...

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தை வளர்பிறையை முன்னிட்டு பிரதோஷ பூஜை நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

தென்காசி | சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும்.

இக்கோவிலுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவர். மேலும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தை மாத வளர்பிறை பிரதோஷமான இன்று சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு வீற்றிருக்கும் ஸ்ரீ நந்தியம்பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு மஞ்சள் பால் பன்னீர் விபூதி சந்தனம் இளநீர் உட்பட பல்வேறு நறுமண திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் அலங்கரிக்கப்பட்ட நிலையில் சோடசை தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.