மாவட்டம்

நிறுத்தி வைத்த பைக்கில் திருட்டு... வைரலான பள்ளி மாணவர்கள் வீடியோ...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பவர் பேங்க் மற்றும் ஹெட் போனை திருடிச் சென்ற பள்ளி மாணவர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Malaimurasu Seithigal TV

தென்காசி | சங்கரன்கோவில் சங்குபுரம் நான்காம் தெருவை சேர்ந்த வேலன், தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். தனது வீடு என்பதால், தான் பயன்படுத்தும் செல்ஃபோன் பவர் பேங்க் மற்றும் ஹெட்ஃபோனை, வாகனத்தின் டேங் கவரிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார்.

சற்று நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது டேங்க் கவரில் இருந்த பவர் பேங்க், ஹெட்ஃபோன் காணாமல் போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த CCTV காட்சிகளை பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் அங்கிருந்த வண்டிகளை நோட்டமிட்டு செல்வதும், வண்டிகளின் டேங்க் கவரில் கிடைப்பவற்றிஅ எல்லாம் திருடிச் செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும், அவர்களது செயல் முதன்முறையாக செய்வது போல இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. டேங்க் கவரில் வெறும் ஹெட்ஃபோன், பவர்பேங்  மட்டுமே இருந்ததால், இது சிறிய திருட்டாக பார்க்கப்படாது.

ஒரு வேளை டேங்க் கவரில் பணமோ நகையோ இருந்திருந்தால் அது பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கும் என்ற நிலையில் மாணவர்கள் இதுபோன்று தவறான பாதையில் செல்லாமல் இருக்க மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக அவ்வப்போது கவுன்சிலிங் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் பள்ளி மாணவர்கள் என்ற காரணத்தினால் இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலயத்தில் புகார் அளிக்கவில்லை என வேலன் தெரிவித்தார்.