மாவட்டம்

தென்பெண்ணை ஆற்றுக்கு சிறப்பு யாகம் நடத்திய சன்னியாசிகள்...

தேவனாம்பட்டினம் கடற்கரையின் சங்கு முகத் துவாரத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து சன்னியாசிகள் வழிபட்டனர்.

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்ட அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில் தென்பெண்ணை ஆற்றுக்கு மகா ஆராதனை ரத யாத்திரை உற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ரத யாத்திரைக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் இன்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை சங்கு முகத்துவாரத்தில் சன்னியாசிகள் தென்பெண்ணை ஆற்றுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தினர்.

இதற்கு சுவாமி ராமானந்தா தலைமையில் சுவாமி மேகானந்தா முன்னிலையில் சன்னியாசிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பெண்ணையாறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை கொண்டு கலசங்களுக்கு யாகம் நடத்தி அன்நீரை கடலில் கலந்தனர்.