கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள சோழன் திட்டை அணைக்கட்டு பகுதியில் மனித எலும்புக்கூடுகள் சிதறி கிடப்பதாக அந்த பகுதியில் மாடு மேய்ச்சலுக்கு சென்ற நபர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் தகவலின் பேரில் சுசீந்திரம் காவல் நிலைய போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது 40 முதல் 50 வயது மதிக்கதக்க மனிதரின் மண்டை ஓடு, முதுகு தண்டுவடம்,கை, கால்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எலும்பு கூடு கிடந்த தனியார் தோட்டத்தில் வேறு எதாவது தடயங்கள் உள்ளதா எனவும் சோதனை செய்தனர்.
பின்னர் சிதறி கிடந்த எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர், மேலும் அப்பகுதியில் காணாமல் போன நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் நரபலி சம்பவத்தை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் எலும்பு கூடுகள் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.