மாவட்டம்

பழனிக்கு உற்சாகமாக புறப்பட்ட காவடிக்குழுவினர்...

பழனி பாதயாத்திரை குழுவினர் பஜனையில் உற்சாகப் பாடல் பாடி நூற்றுக்கும் மேற்பட்ட காவடியுடன் திருப்பத்தூரில் இருந்து அதிகாலை கிளம்பினார்.

Malaimurasu Seithigal TV

சிவகங்கை | திருப்பத்தூர் வழியாக பழனி செல்ல பல மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று  கொண்டு இருக்கின்றார்கள்.

இந்நிலையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தங்கவேல் நகர் ஆனந்த காளியம்மன் கோவில் சக்திவேல் காவடி குழுவினர் அங்கிருந்து காவடியுடன் பாதயாத்திரையாக திருப்பத்தூரில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கு இரவு பஜனையில் ஈடுபட்டனர். பஜனையில் முருகனை போற்றி துதி உற்சாக பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் கோவிலில் வழிபாடு நடத்தினர்.

பின், அங்கிருந்து சுமார் நூற்றுக்கணக்கான காவடிகளுடன் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். தைப்பூசம் அன்று பழனியில் முருகனை தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டு இருக்கிறார்கள்.