மாவட்டம்

விமரிசையாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா...

சிங்கம்புணரி நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Malaimurasu Seithigal TV

சிவகங்கை | சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பன்னி கண்மாய் உள்ளது.  கடந்த பருவ மழை காரணமாக கண்மாயில் நீர் நிறைந்து விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்தது.

அறுவடை முடிந்த பின் இப்பகுதி மக்கள் இயற்கையை கொண்டாடும் விதமாக ஊர்மக்கள் அனைவரும் இலவசமாக கண்மையில் வளர்க்கப்பட்ட மீனை பிடித்துச் செல்ல கிராம அம்பலக்காரர்கள் முடிவு செய்தனர்.

அதை தொடர்ந்து வடக்கு மற்றும் தெற்கு வளவு அம்பலக்காரர்கள் கண்மாய் கரையில் இருந்து இயற்கையை வணங்கி விட்டு வெள்ளை துண்டால் கொடியசைக்க,  அதிகாலையில் இருந்து காத்திருந்த கிராம மக்கள் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்க துவங்கினர்.

கச்சா, பரி, வலை, ஊத்தா உள்ளிட்ட கிராம மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களைப் பிடிக்க துவங்கினர்.  அவர்களது வலையில் விரால் மீன், கெண்டை பிடி, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட நாட்டு ரக மீன்கள் கிடைத்து. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மீன்பிடித் திருவிழாவில் கண்ணமங்கலபட்டியை சுற்றி உள்ள கிராம மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்திருந்து மீன்களை இலவசமாக பிடித்துச் சென்றனர். மகிழ்ச்சியுடன் சந்தோஷமாக மீன்பிடித்த இந்த நிகழ்வு பெரும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.