மாவட்டம்

யானைகளை வரவிடாமல் தடுக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை...

காட்டுயானைகளால் சேதம் அடைந்த விலை நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

மேட்டூர் அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளதுஏ ழரைமத்திகாடு. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் வாழை, நெல், கரும்பு,மக்காச்சோளம் நிலக்கடலை ஆகியவை பயிரிட்டு வாழ்வாதாரத்தை ஈட்டிவந்தனர்.

இந்நிலையில் அருகில் உள்ள வட பர்கூர்காப்புகாடு வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு கூட்டமாக வந்த காட்டுயானைகள் பழனிசாமி (70) என்பவர் தோட்டத்தில் புகுந்து வாழை பயிர்களை தின்று சேதப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள ரமேஷ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து நிலக்கடலை மற்றும் மக்காச்சோளம் பயிர்களையும் சேதப்படுத்தியது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “யானை , காட்டுபன்றி, மான், கரடி போன்ற காட்டு விலங்குகள் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியே வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திவருகிறது.

இதனால் பெரிதும் நஷ்டம் அடைவதாக கவலை தெரிவித்தனர். எனவே சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், காட்டு விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வருவதை தடுக்க அகழிகள் மற்றும் மின்வேலிகள் அமைக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.