மாவட்டம்

பாறையில் மோதி விபத்துக்குள்ளான விசைப்படகு...

விசைப்படகு பாறையில் மோதி விபத்து ஏற்பட்டது. பல கோடி மதிப்புள்ள விசைப்படகு கடலில் மூழ்கியது பல லட்சம் மதிப்புள்ள மீன்களும் கடலுக்குள் மூழ்கியது. மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Malaimurasu Seithigal TV

நெல்லை: இடிந்தகரை கடல் பகுதியில் நேற்று மாலை விசைப்படகு ஒன்று பாறையில் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்துக்குள்ளான படகில் 11 மீனவர்கள் இருந்திருக்கிறார்கள் அந்த மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தகவல் கிடைத்திருக்கிறது.

தூத்துக்குடி மீனவர்கள் கடந்த 1ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இருக்கின்றனர் நேற்று மீன்பிடித்து விட்டு ஊர் திரும்பும்போது இடிந்தகரை பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிய வந்திருக்கிறது.

மேலும் இந்த விபத்து நடப்பதற்கு முக்கிய காரணமாக இந்த படகை ஒட்டி வந்த ஓட்டுநர் தூங்கியதால் தான் இந்த பாறை மீது மோதி விபத்து நடந்து இருப்பதாக கூறுகின்றனர் மேலும் இந்த விசைப்படகு 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆகும்.

இந்த விசைப்படகில் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இன்று படகை மீட்க தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரியிலிருந்து விசை படைகள் வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த விசைப்படகு 98% கடலில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.