மாவட்டம்

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்...!!!

Malaimurasu Seithigal TV

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு திருப்பதி மலையில் ஸ்ரீராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார் மலையப்ப சுவாமி.

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு இன்று காலை ஏழுமலையான் கோவிலில் சீதாதேவி சமேத ராமர்,லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.  தொடர்ந்து மாலை உற்சவர் மலையப்ப சுவாமி ராமர் அலங்கார திருக்கோலம் பூண்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை 
அடைந்தார்.

அங்கு தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமருக்கு தீப, தூப, நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அனுமந்த வாகன சேவை கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.  அப்போது நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமரை கண்டு வழிபட்டனர்.

இந்த நிலையில் இரவு ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ராமரின் ஆஸ்தானம் (தர்பார்) ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ளது.  நாளை இரவு ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.