மாவட்டம்

மன்னார்குடி கோவிலில் நடைபெற்ற கால பைரவருக்கான சிறப்பு பூஜை...

Malaimurasu Seithigal TV

திருவாரூர் | தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மன்னார்குடி அருகே பாமணி நாகநாதர் திருக்கோவிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை விழா சிறப்பாக நடைபெற்றது.

மன்னார்குடி அருகே பாமணிகிராமத்தில் பழமைவாய்ந்த நாகநாதர் ஆலயம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி கால பைரவருக்கு பால், தயிர், அரிசிமாவு, திரவியம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார தீபம் காட்டப்பட்டது. மன்னார்குடி மற்றும் சுற்றுபகுதியைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.