காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் 21 வயதான பூபதி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ரஞ்சனி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி வாய் சண்டையாக மாறி உள்ளது. அந்த கருது வேறுபாடு நீண்ட நாட்களாகியும் சரியாகாது நிலையில் ஆத்திரமடைந்த ரஞ்சனி இனிமேல் “எனக்கு நீ தேவையில்லை நான் உன்னை பார்க்க மாட்டேன் உன்னோடு பேசமாட்டேன் நான் உன்னை காதலிக்க மாட்டேன்” எனக் கூறி பூபதியை மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.
இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த பூபதி கடந்த (செப் 11) ஆம் தேதி மாலை சுமார் ஏழு மணி அளவில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த ரஞ்சனி பூபதியின் உயிரிழப்பிற்கு தான் தான் காரணம் என்று நினைத்து மனமுடைந்து பித்து பிடித்தது போல இருந்ததாக சொல்லப்படுகிறது. பூபதியின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த தானும் உயிருடன் இருக்கக் கூடாது என நினைத்துள்ளார் ரஞ்சினி. எனவே இன்று அதிகாலையில் ரஞ்சனியின் பெற்றோர் எழுந்து பார்க்கும் பொழுது ரஞ்சனி மின்விசிறியில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஞ்சனியின் பெற்றோர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரஞ்சனியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் ரஞ்சனி ஏற்கனவே இருந்துவிட்டதாக கூறியுள்ளார். உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் ரஞ்சனியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் காதல் தோல்வியால் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர் . காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள் ஆனால் ஸ்ரீபெரும்புதூரில் காதல் பெற்றோர்களின் அன்பை மறைத்து உயிரை காவு வாங்கி வருகிறது. இதனால் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் பிள்ளைகள் தவறு செய்தலும் கண்டிக்க பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.