மாவட்டம்

ஆபத்தை உணராமல் பேருந்து கூரை மேல் ஏரி பயணம் செய்யும் மாணவர்கள்...

Malaimurasu Seithigal TV

ராமநாதபுரம் | கமுதி பள்ளி கல்லூரிகளுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறி தொடர்ந்து ஆபத்தான முறையில் பள்ளி மாணவ மாணவிகளை அரசு தனியார் பஸ்களிலும் சரக்கு வாகனங்களில் ஏற்றி செல்லும் நிலை தொடர்கதையாக உள்ளது.

இவற்றை கட்டுப்படுத்த போக்குவரத்து மோட்டார் வாகன அதிகாரிகள் போலீசார் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி கல்லூரிக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆபத்தான பயணத்தை தொடர்ந்து நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய போலீசார் கண்டு கொள்ளாதால் மாணவர்கள் அரசு தனியார் பேருந்துகளின் மேற்கூரைகளிலும் சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஏறிச்சென்று ஆபத்தான பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவ மாணவிகளின் நலன் கருதி காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் பெற்றோர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.