திருவள்ளூர் | மாண்டஸ் புயலால் நேற்று இரவு தொடர்ச்சியாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்து நேற்று 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த உபரி நீரானது உதப்பை எறையூர், ராஜபாளையம், மெய்யூர், தாமரைப்பாக்கம் வழியாக கொசத்தலை ஆற்றில் கலந்து காரனோடை, ஜனப்பச்சத்திரம், இடையஞ்சாவடி வழியாக எண்ணூர் கடலில் கலக்கிறது.
மேலும் படிக்க | மாண்டஸ் புயல் கடந்து வந்த பாதை...!
மேலும் உபரி நீர் செல்லும் இராஜபாளையம் அடுத்த மெய்யூர் - கொசுத்தலை ஆற்றுப்பகுதியில் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பாதையை கடப்பதற்காக கடந்த பல வருடங்களாக சிரமப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது சுமார் 14 கோடி செலவீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பணிகள் நடைபெறும் சூழ்நிலையில் அவசரத்திற்காக கிராம மக்கள் ஆற்றை கடக்கும் வகையில் தற்காலிக தரைப்பாலும் அமைக்கப்பட்டது.
மேலும் படிக்க | புயலால் சேதமடைந்த போக்குவரத்து சிக்னல்கள் & சிசிடிவி கேமராக்கள்...! காவல்துறை தகவல்...!
தற்பொழுது பூண்டிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மெய்யூர் தரை பாலத்திற்கு மேலே தண்ணீர் செல்வதால் மெய்யூர், ராஜபாளையம், மாலந்தூர், ஆவாஜிபேட்டை உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் திருவள்ளூர் பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.