மாவட்டம்

கை கூப்பி நிற்கும் கரும்பு மோடி... பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விவசாயி...

செங்கரும்பினால் ஆன பிரம்மாண்ட பானை, பிரதமர் மோடி உருவம் அமைத்து தைப் பொங்கல் விழாவை கொண்டாடிய விவசாய குடும்பத்தினர்.

Malaimurasu Seithigal TV

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது குடும்பத்தினர் விவசாயம் தொழில் செய்து வருகின்றனர்.

உழவர் திருநாளானதைப் பொங்கல் திருவிழாவில் உழவர்களையும், உழவுத் தொழிலையும், உலகுக்கு எடுத்துக்காட்டி, ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் செந்தில் குடும்பத்தினர் செங்கரும்பினால் ஆன வடிவங்களை அமைத்துதைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தைப் பொங்கல் திருநாளான இன்று 2 டன் எடை செங்கரும்பினால் 12 அடி உயரம், 10 அடி அகலமும் கொண்ட வகையில் செங்கரும்பு பானை அமைத்து, உழவர்களுக்கு உதவிடும் பிரதமர் மோடியின்  செயலை பெருமைப்படுத்தும் வகையில் செங்கரும்பினால் ஆன மோடியின் உருவத்தை அமைத்துள்ளார்.

தைப் பொங்கல் விழாவை புது பானையில் பொங்கல் வைத்து, ஊரில் உள்ள விவசாய மக்களையும் அழைத்து இயற்கை தெய்வமான சூரியனுக்கு படையல் இட்டு வணங்கி மகிழ்கிந்தனர்.

செங்கரும்பினாலானபிரம்மாண்டபானையும், பிரதமர் மோடியின் உருவமும் அமைத்து உள்ளதை அறிந்து ஏராளமான கிராமமக்கள் நேரில் வந்து அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.