மாவட்டம்

வேலை கிடைக்காத காரணத்தினால் தற்கொலை...போலீசார் மீட்பு...

Malaimurasu Seithigal TV

வேலை கிடைக்காத காரணத்தினால் தற்கொலை முயற்சி செய்ய இருந்த வட மாநில வாலிபரை திருவொற்றியூர் போலீசார் மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி மீட்டுள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும் மேம்பாலத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக ரயில் நிலையத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அவருக்கு தமிழ் தெரியாத காரணத்தினால் திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் ஒருவர் ஹிந்தியில் அவரிடம் உரையாடி உள்ளார், அப்பொழுது அந்த நபர் தனக்கு மதுபாட்டில் வேண்டும் என கூறியுள்ளார், அதற்கு போலீசார்  ஏற்பாடு செய்து தருகிறோம் என தெரிவித்து அவரிடம் லாவகமாக பேச்சுக் கொடுத்து வந்தார்கள். அதற்கு பிறகாக தீயணைப்புத் துறையினரும் கீழே வந்து தார்ப்பாய் மூலமாக தயார் நிலையில் இருந்தார்கள். ஒரு வேலை கீழே விழுந்தால் பிடிப்பதற்காக தயார் நிலையில் இருந்தார்கள். அதன் பிறகு போலீசார் நடைமேடை மேல் ஏறி அந்த நபரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த லக்ஷ்மன்(35) என்பதும், வேலை தேடி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் சென்னைக்கு வந்ததும் தெரிய வந்தது. வேலை கிடைக்காத காரணத்தினால்  குடும்பத்தினரிடம் தொலைபேசியில் உரையாடிவிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நபரை பத்திரமாக மீட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.