மாவட்டம்

பள்ளி மாணவர்களை டீ வாங்கி வர சொல்லும் ஆசிரியர்கள்...! நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கும் பெற்றோர்கள்...!

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 150கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களை, தலைமை ஆசிரியர் ஒப்புதலோடு வகுப்பு ஆசிரியர்கள் டீ வாங்கிவர பள்ளி மாணவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற சம்பவம் இப்பள்ளியில் நீடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து தலைமை ஆசிரியர் மீதும், வகுப்பு ஆசிரியர்கள் மீதும்   துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.