மாவட்டம்

பழனி முருகன் கோவில் தங்க தேரோட்டத்தில் குவிந்த பக்தர்கள்...

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் | பழனி முருகன் கோவில் மலைமீது  நாள்தோறும் மாலை நேரத்தில் தங்க தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை  6:30 மணிக்கு சாயரச்சை பூஜை முடிவடைந்து சின்ன குமாரர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தங்கத்தேரில் அமர்த்தப்படுவார்.

பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் சின்னக் குமார் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று மலைமீது கார்த்திகை தீப திருவிழா  காப்புக்கடுதல் நிகழ்ச்சி நடைபெற்றதால் தமதமாக தங்க தேரோட்டம் நடைபெற்றது.

தங்க தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் சின்னக் குமாரர் எழுந்தருளி மலை மீது தங்க தேரில் வலம் வந்தார். மலைமீது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி முருகனை தரிசனம் செய்தனர்.

வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் தங்க தேரோட்டத்தில் கலந்து கொண்டதால் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.