மாவட்டம்

கர்ப்பணி என்றும் பாராமல் மனைவியை வெட்டிய கணவன்...தடுக்க வந்த தாயுக்கும் சரமாறியான வெட்டு...

Malaimurasu Seithigal TV

வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததால் அம்மா வீட்டுக்கு வந்த மனைவி 6 மாத கர்ப்பணி என்றும் பாராமல் மனைவியை வெட்டிய கணவன் ராகேஷ்யை இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அயனாவரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இயேசு ரத்தினம் இவருடைய மனைவி ஸ்டெல்லா மேரி. இவர்களுக்கு டெபோரா  என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து கடந்த 8  மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டனர். திருமணமான மூன்று மாதத்தில் டெபோராவை கணவர் ராகேஷ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டொபோரா 6 மாத கர்பிணியாக உள்ளார்.

மேலும் ராகேஷ் வரதட்சணை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்ததால்  டெபோரா  தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். இதனிடயே நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு வந்து தனது மனைவி டொபோராவை வீட்டிற்கு வருமாறு ராகேஷ் தகராறு செய்துள்ளார். மேலும் தனிக்குடித்தனம் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.வர மறுத்த டெபோராவை  கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியால் வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு தடுக்க வந்த  மாமியார் ஸ்டெல்லா மேரியை ராகேஷ் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் ஸ்டெல்லா கை வெட்டப்பட்டு எலும்பு முறிவு மற்றும் நரம்பு வெட்டப்பட்டு ஆபத்தான முறையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இது தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாக்குதல் நடத்திய ராகேஷை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். ராகேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ராக்கேஷ் வீட்டில் இருந்து எகிறி குதித்து தப்பியோடும் போது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.