மாவட்டம்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்...! நீரில் மூழ்கி பலி...!

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தில் நேற்று வடவாற்றில் சுதாகர் என்பவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் பொதுமக்கள் நேற்று இரவு முதல் தொடர்ந்து தேடும் பணியில் தீவிரமாக  ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து காலை முதல் காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தீவிரமாக தேடியதில் சுதாகர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.