மாவட்டம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்...! போலீசாரிடம் சிக்கிய சம்பவம்..!

Malaimurasu Seithigal TV

தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி சோதனை சாவடி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தடாகம்  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தடாகம் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன்(21) என்பதும், இவர் ஜேசிபி ஓட்டுனராக இருந்து கொண்டு கேரளாவில் இருந்து கஞ்சாவை விற்பனைக்கு வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மோகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.