மாவட்டம்

மெக்கட்ரான்ஸ் நடத்திய எலெக்ட்ரிக் பைக் ரேஸ்!

முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப பேராசிரியர்கள் கூட்டமைப்பான மெக்கட்ரான்ஸ் நிறுவனம் சார்பில் எலெக்ட்ரிக் பைக் பந்தயம், ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் , தற்போதைய மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப பேராசிரியர்கள் கூட்டமைப்பு இணைந்து  மெக்கெட்ரான் மோட்டார்ஸ் என்ற நிறுவனம்   வீரகுமார் என்பவரால் தொடங்கப்பட்டது.

தற்போது 50 பேர் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமே, எலக்ட்ரிக் பைக்கின் வடிவமைப்பு மற்றும் அதன் சார்ந்த தொழில் நுட்பத்தையும் மெருகேற்றி, வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பமானது புதிய புதிய சிந்தனைகளை வடிவங்களாக கொண்டு வர இந்நாள் மற்றும் எதிர்கால  மாணவர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாக அமையும் என்பது தான்.

அதன் ஒரு முன்னோட்டமாக இன்று மாணவர்கள் தங்களது சிந்தனை வடிவத்தில் கொண்டு வந்த எலக்ட்ரிக் பைக் பந்தயம் ஒரு முன்னோட்டமாக நடத்தப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தாங்கள் வடிவமைத்த பைக்கின் திறன் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மெக்கட்ரான்ஸ் நிறுவனம் மூலம் எலக்ட்ரிக் பைக் வடிவமைப்பு துறையில் முதல் பெண்கள் குழு இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையினை வெளிப்படுத்தினார். இப்போட்டியில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இதுபோன்று போட்டியில் நடத்துவதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனத்  துறையில்  புதிய பரிமாணத்தை  அடைய இது போன்று  போட்டிகள் ஒரு தொடக்கமாக அமையும் .