மாவட்டம்

புலி நடமாட்டம்... கோரிக்கை வைத்த மக்கள்!!

Malaimurasu Seithigal TV

ஏதேனும் அசாம்பாவிதம் நிகழும் முன்பு வனத்துறை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் குந்தா அருகே சுற்றி வரும் புலியை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக் காலங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், குந்தா வட்டம் எடக்காடு கிராமத்தில் உள்ள ஆடமனைத் தோட்டத்தில் புலி ஒன்று இன்று காலை முதல் சுற்றித் திரிந்து வருகிறது. இந்த புலியால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.