மாவட்டம்

இன்று உலக இருதய தினம்...! கையசைவு மூலம் உலக சாதனை..!

Malaimurasu Seithigal TV

உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சார்பில் ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஒன்று சேர்ந்து ஆரோக்கியமாக இருதயம் போன்று கை அசைவினை வெளிப்படுத்தும் விதமாக ஆசிய புத்தக சாதனை  நிகழ்த்தப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், புகைப்பிடிப்பதனால் பல்வேறு நோய்கள் வருகிறது. இந்த பழக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். அதேபோல மன அழுத்தம் காரணமாக பல்வேறு நோய்கள் வருகின்றன. ஆரோக்கியமான உடலை வைத்துக் கொண்டால் வாழ்க்கை அழகாக மாறும் என தெரிவித்தார்.