மாவட்டம்

பனிப்பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு...

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பனிப்பொழிவு காரணமாக பாதித்த தக்காளி விளைச்சலால், போதிய விலை இன்றி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

நெல்லை | ராதாபுரம் தாலுகா மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனி பொழிவு காணப்படுகிறது.

இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.மேலும் செடியிலேயே பழங்கள் அழுகி விடுகின்றன. இந்த நிலையில் தக்காளி உற்பத்தி குறைவாக இருந்தும் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு சந்தையில் கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாய் முதல் 12 ரூபாய் வரை தான் விற்பனையாகிறது.

செல் குறைந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.