மாவட்டம்

கொல்லிமலை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாபயணிகள் செல்ல தடை...

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயனிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாமக்கல், மாவட்டம் கொல்லிமலையில் உள்ள செம்மேடு, ஆரியூர் நாடு, வாளவந்திநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

குறிப்பாக கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை காண சுமார் 1500 படிக்கட்டுகளை கடந்து தான் அருவிக்கு செல்ல முடியும். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மழையால் படிக்கட்டுகள் பாசன் பிடித்துள்ளது.

இதனால் அதில் செல்லுபவர்கள் வலிக்கி விழுந்து உயிர் சேதம் ஏற்படும் என்பதால் கொல்லிமலையில் உள்ள அருவிகளுக்கு 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் இந்த தடையானது நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.