மாவட்டம்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!

Malaimurasu Seithigal TV

புத்தாண்டு பண்டிகையை கொண்டாட சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.  கொடைக்கானலுக்கு புத்தாண்டு பண்டிகையை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.  மேலும் மேக கூட்டங்களை கண்டு ரசித்தபடி புகைப்படம் எடுத்தும் தங்களது மகிழ்ச்சியையும் புத்தாண்டு பண்டிகையையும் கொண்டாடி வருகின்றனர் . கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பணிகளின் வருகையால் பல  இடங்களில்   போக்குவரத்து நெரிசல் உள்ளது.