மாவட்டம்

ஒட்டஞ்சத்திரத்தில் ஒட்டகப்பால்.. செல்ஃபியுடன் குஷியில் குதிக்கும் சுற்றுலா பயணிகள்...

தாய்ப்பாலுக்கு நெருக்கமான இயற்கைப் பொருளான ஒட்டகப்பால் விற்பனை அமோகமாக இருக்கிறது.

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் | ஒட்டன்சத்திரம் லக்கையன்கோட்டை பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள ஒட்டகங்களைக் கான உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் தாயின் பாலுக்கு நெருக்கமான இயற்கைப் பொருளாக கருதப்படும் ஒட்டகப்பால் சர்க்கரை நோய் வருவதை தடுப்பதோடு, நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது.

கொழுப்பை குறைக்கவும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் நல்ல இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதனால் ஒட்டகப்பாலை 70 ரூபாய் கொடுத்து பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும், பாதயாத்திரை பக்தர்களும் அருந்தி வருகின்றனர். அதோடு ஒட்டக சவாரி செய்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.