trichy husband attack her wife Admin
மாவட்டம்

“இந்த நிலை வேறு எந்த குழந்தைக்கும் வரக்கூடாது” - கண் முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்.. எமனாக நின்ற கணவனின் "கள்ள உறவு"!

தடுக்க வந்த ஜீவஜோதியின் தாயையும் பிடித்து கீழே தள்ளிவிட்டுட்டு குழந்தைகளின் முன்னிலையில் கழுத்து, தலை மற்றும் இடுப்பு பகுதிகளில் அரிவாளால் வெட்டினர், இதற்கிடையே ஜீவஜோதியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீரமணியிடம் ஜீவஜோதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

Mahalakshmi Somasundaram

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜீவஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும், 10 மாத பெண் குழந்தையும் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து அவரவர் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளும் தாய் ஜீவஜோதியின் அரவணைப்பில் இருந்த நிலையில் வீரமணி போதைக்கு அடிமையாகியுள்ளார். மேலும் பல பெண்களுடன் வீரமணிக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஜீவஜோதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் (ஜூன் 01) தேதி காலை தனது வீட்டிற்கு வெளியில் நின்று ஜீவஜோதி போன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வீரமணி அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

trichy husband attack her wife

இதை பார்த்து தடுக்க வந்த ஜீவஜோதியின் தாயையும் பிடித்து கீழே தள்ளிவிட்டுட்டு குழந்தைகளின் முன்னிலையில் கழுத்து, தலை மற்றும் இடுப்பு பகுதிகளில் அரிவாளால் வெட்டினர், இதற்கிடையே ஜீவஜோதியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீரமணியிடம் ஜீவஜோதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் தப்பி சென்ற வீரமணியின் மீது புகாரளித்த ஜீவஜோதியின் தாய் வீரமணியை விரைவில் கைது செய்ய வேண்டும் என ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

வீரமணி ஜீவஜோதியை துரத்தி துரத்தி வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதற்றம் அடைய செய்துள்ளது. கணவன் மனைவியை பிள்ளைகளின் கண்முன்னே துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரமணியின் தரப்பினர் ஜீவஜோதிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி வரும் நிலையில் வீரமணியை கைது செய்த பிறகே தாக்குதலுக்கான முழு காரணமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.