மாவட்டம்

வேரோடு சாய்ந்து குடிசை மீது விழுந்த புளியமரம்...

புதுச்சேரியில் மாண்டஸ் புயல் காரணமாக குடிசை வீடுகளில் வேரோடு சாய்ந்த புலிய மரத்தை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அகற்றினர் மேலும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Malaimurasu Seithigal TV

மாண்டஸ் புயல் காரணமாக நேற்றைய தினம் புதுச்சேரியில் காற்று வீசியது இந்நிலையில் புதுச்சேரி அடுத்த பிள்ளையார்குப்பம், அங்களாம்மன் கோவில் வீதியில் இருந்த பழமையான புலியமரம் காற்றின் காரணமாக வேரோறு பெயர்ந்து அருகில் இருந்த இரு குடிசை வீடுகள் மீது சாய்ந்து விழுந்தது.

இதில் அவ்விடுகளில்  செல்வராணி அவரது மகன் சுடர்கொழுந்து இருவரும்  காயமின்றி உயிர்தப்பினர். இதேபோல், லட்சுமணன், அவரது மனைவி பாரதி, மகள் அஸ்வினி ஆகியோரும் அதிஷ்டவசமாக காயம் ஏதுமின்றி வீட்டில் இருந்து வெளியே வந்து தப்பினர்.

இது குறித்து தகவலறிந்த  தேசிய பேரிடர் மீட்பு படையினர்,  பாகூர் தீயனைப்பு நிலைய வீரர்கள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் மற்றும் ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் மீது விழுந்து புலிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.