மாவட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த கோரி நடைபயணம்...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடை பயணம் மேற்கொண்டனர்.

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை விடியா திமுக அரசு நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளது.

இதை கண்டித்தும் வாக்குறுதிகளே அளிக்காத ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து CPS ஐ இரத்து செய்யப்பட்ட நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிபடி CPS ஐ ரத்து செய்ய கோரி நடைபயணம் மேற்கொண்டனர்.

மேலும், பணிக்கொடை வழங்க கோரியும் அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு சாலைகளின் வழியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அரசு ஊழியர் சங்கதினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

நேற்று சேத்தூரில் தொடங்கிய நடைபயணம் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக சென்று வரும் 18ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யப் போவதாக நடை பயணத்தில் மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.