மாவட்டம்

உதகையில் வெளுத்து வாங்கிய மழை...!!!

Malaimurasu Seithigal TV

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை முதல் வெயிலும், பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலையும் அதனை தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்த நிலையில் பிற்பகல் முதல் கனமழை பெய்தது.  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம் முள்ளிக்கொரை, பெர்ன்ஹில், காந்தள், பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.  சமவெளி பிரதேசங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இந்த கனமழையின் காரணமாக இதமான கால நிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.