மாவட்டம்

காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானையால் பதற்றம்...

சாலையில் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து ஒற்றை காட்டு யானை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Malaimurasu Seithigal TV

கோவை | மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி அலையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி கோத்தகிரி சாலையை கடந்து மற்ற வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் இன்றுஇரவு கோத்தகிரி மலை பாதையில் குஞ்சப்பனை அருகே ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று காரை வழிமறித்தது என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுநர் ஒருவித அச்சத்துடனே வாகனத்தை பின்னோக்கி ஓட்டினார் காட்டு யானை வாகனத்தை விடாமல் துரத்தி வந்தது.

வாகனத்தின் முன் பகுதியை தந்தத்தால் குத்தி தும்பிக்கையால் தாக்கியது உடனே சமயோசிதமாக செயல்பட்ட வாகன ஓட்டுநர் யானையின்  பிடியில் சிக்காமல் காரை வேகமாக ஓட்டினார். காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள் மேலும் அந்த வழியே வாகனத்தில் வந்தவர்கள் கோத்தகிரி நோக்கி முன்னோக்கிச் செல்லாமல் பாதி வழியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர்.

மலைப்பாதையில் சாலை ஓரத்தில் இருந்து செடி கொடிகளை தின்றபின்னர் காட்டுயானை வனப்பகுதிக்குள் ஆடி அசைந்தபடி சென்றது அதன் பின்னர் வாகன ஓட்டுநர்கள் அந்த வழியே வாகனத்தை ஒருவித அச்சத்துடனே சென்றனர்.