மாவட்டம்

இடுப்பளவு நீரில் மூதாட்டி சடலத்தை சுமந்து சென்ற அவலம்...

சூளகிரி அருகே உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை இடுப்பளவு உயரம் கொண்ட ஆற்றில் நீரில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி : சூளகிரி அருகே உள்ள பீளாளம் கிராமத்தை சேர்ந்த சக்கார்லம்மா(65) என்னும் மூதாட்டி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில் உறவினர்கள் சார்பில் இறுதி சடங்குகள் மேற்க்கொள்ளப்பட்டன.

மூதாட்டியின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல வழக்கமாக பயன்படுத்தி வந்த ஆற்று வழியில் தற்போது  தொடர்மழையால் இடுப்பளவு உயரத்திற்கு வெள்ளநீர் செல்வதால், மூதாட்டியின் சடலத்தை ஆற்றின் இருபுறங்களிலும் கயிறு கட்டி, கயிற்றை பிடித்துக்கொண்டு மூதாட்டின் உறவினர்கள் சுமந்து சென்றனர்.

இறுதி சடங்கில் பங்கேற்ற பெண்களும் கயிறு பிடித்துக்கொண்டு ஆற்றை கடந்தனர். மழைக்காலங்களில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்தால், இதுப்போன்ற அவலநிலை தொடர்வதாகவும், அரசு, ஆற்றின் மீது தரைப்பாலத்தை அமைத்து தர பீளாளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.