மாவட்டம்

பொது கழிப்பறையை பயன்படுத்தும் பெண்கள்...! மறைந்து வீடியோ எடுத்த மர்ம நபர்...!

Malaimurasu Seithigal TV

பொது கழிப்பறைக்கு செல்லும் பெண்களை வீடியோ எடுத்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்

திருச்சி மாநகரம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பொதுக்கழிப்பறை ஒன்று அமைந்துள்ளது. அந்த கழிப்பறைக்கு செல்லும் பெண்களை எடமலைப்பட்டிபுதூர் செல்வம் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து அப்பகுதியினர் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.