மாவட்டம்

உலக சிறுவர் வன்கொடுமை தினம்... பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சூடு பற்றி எடுத்துரைத்த காவல் ஆய்வாளர்...

Malaimurasu Seithigal TV

உலக சிறுவர் வன்கொடுமை தினத்தை முன்னிட்டு மாதவரத்தில் உள்ள மாதவரம் ஜெயகோபால் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் மாதவரம் காவல்  நிலையத்தை பார்வையிட்டனர் .

திருவள்ளூர்: மாதவர  காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ்  பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலைய செயல்பாடுகளை பற்றி விளக்கி, ஆய்வாளர் அறை சிறைக்கூடம், ஆயுத கிடங்கு ஆகியவற்றை சுட்டிக்காட்டி துப்பாக்கி செயல்படும் விதத்தளை செயல்முறை விளக்கமாக எடுத்துரைத்தார் . மேலும் பாலியல் வன்கொடுமை ,அவரச எண்கள்  பற்றி எடுத்துரைக்கும் வகையில் பேசினார். பின்னர் பொது வினாக்களுக்கு பதிலளித்த  மாணவ மாணவிகளுக்கு ஆய்வாளர் பரிசு வழங்கினார் இதில் ஜெயகோபால் கரோடியா பள்ளி ஆசிரியைகள் ஜான்சிராணி, லீலா ,பூங்கொடி  மற்றும் மாதவரம் மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் போலீசார் கள் உடனிருந்தனர்.